செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 9 அன்று தில்லியில் தொடங்கும் தொடர், ஜூன் 19 அன்று பெங்களூரில் நிறைவுபெறுகிறது. 

இத்தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடாமல் இருந்த நோர்கியா அணியில் இடம்பெற்றுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்குப் புதிதாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தெ.ஆ. டி20 அணி:

டெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, நோர்கியா, பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வாண் டர் டுசென், மார்கோ யான்சென். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் விடியல் பயண பெண்களின் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி கே.பழனிசாமி வருகை: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாளைய மின்தடை: காளப்பநாயக்கன்பட்டி

பரமத்தி வேலூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 அடி உயர வாழைத்தாா்!

அணுகு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

SCROLL FOR NEXT