முகப்பு
செய்திகள்

பாகிஸ்தான் முதலில் பேட்டிங்: பிரபல தெ.ஆ. வீரர் விலகல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பாகிஸ்தான் அணி
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 3 ஆட்டங்களில் 2 புள்ளிகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்றாலே அரையிறுதி உறுதியாகி விடும். பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஸமானுக்குப் பதிலாக முகமது ஹாரிஸ் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

பாகிஸ்தான் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய ஆட்டம் என்பதால் பரபரப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →