செய்திகள்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

DIN

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

ஞாயிறுடன் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. எல்லா அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியையாவது எதிர்கொண்டதால் அரையிறுதிக்குத் தகுதி பெற பலத்த போட்டி நடக்கிறது. 

இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை நியூசிலாந்து அணி வீழ்த்திய பிறகும் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகவில்லை. இத்தனைக்கும் ஒரு தோல்வி, 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருந்தது நியூசிலாந்து. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி என்கிற தகுதியை அடைந்தது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்தை நெட் ரன்ரேட்டில் பின்னுக்குத் தள்ள முடியும். ஆனால் அதற்குக் குறைவான ஸ்கோரையே ஆஸி. அணி எடுத்ததால் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது. 

ஐசிசி போட்டிகளில் சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து அணி இந்தமுறை உலகக் கோப்பையை வெல்லுமா என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

SCROLL FOR NEXT