செய்திகள்

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா?: ஆஸி. கேப்டன் பதில்

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பதிலளித்துள்ளார்.

IANS

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று 3-ம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக இருந்த ஆரோன் ஃபிஞ்ச், கடந்த செப்டம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை எந்தவொரு டி20 ஆட்டத்திலும் விளையாட வேண்டியதில்லை. 9 மாதங்கள் கழித்து 2023 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவில் டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஸி. அணி. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் கேப்டன் பதவியிலிருந்து ஆரோன் ஃபிஞ்ச் விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரு பேட்டியில் ஃபிஞ்ச் கூறியதாவது:

இல்லை. டி20 கிரிக்கெட்டிலிருந்து தற்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. பிபிஎல் போட்டியில் விளையாடுவேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில் இன்னமும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் காயம் காரணமாக ஆஸி. அணியின் கடைசி ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் விளையாடவில்லை.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT