செய்திகள்

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது அகில இந்திய செஸ் கூட்டமைப்பு. 

DIN

பிரபல இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது அகில இந்திய செஸ் கூட்டமைப்பு. 

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் கார்ல்சனை இந்த வருடம் மூன்று முறை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. ஒலிம்பியாட் போட்டியில் விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

கடந்த வருடம், தமிழகத்தைச் சோ்ந்தவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பெற்றவருமான சி.ஏ.பவானி தேவி, கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் உள்பட 35 பேருக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருட அர்ஜுனா விருதுக்கு செஸ் வீரர்களான பிரக்ஞானந்தா, பக்தி குல்கர்னி ஆகிய இருவரையும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

SCROLL FOR NEXT