செய்திகள்

அடேய் கேமராமேன்!: விடியோ குறித்து அஸ்வின் ஜாலியான பதில்!

இந்தக் காணொளியை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் ரீட்வீட் செய்ததால்...

DIN

சமூகவலைத்தளத்தில் பரவிய காணொளி குறித்து வேடிக்கையாகப் பதிலளித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின்போது ஏற்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. டாஸ் நிகழ்வின்போது ரோஹித் சர்மாவை ரவி சாஸ்திரி பேட்டி கண்டார். அப்போது அவருக்குப் பின்னால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஸ்வின் இரண்டு டி ஷர்டுகளைக் கொண்டு ஏதோ சரிபார்த்துக் கொண்டிருந்தார். பிறகு இரு டி ஷர்ட்களையும் முகர்ந்து பார்த்தார். இதைக் கவனித்த கேமராமேன் ரோஹித் சர்மா பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது பின்னால் நின்றுகொண்டிருந்த அஸ்வின் பக்கமும் லேசாக கேமராவைத் திருப்பினார். இந்தக் காணொளியை ஒருவர் சரியாகக் கவனித்து ட்விட்டரில் வெளியிட்டார். நமது உடைகளைச் சரியாகக் கண்டுபிடிக்க இதுவே நல்ல வழி என்று எழுதியிருந்தார். இந்தக் காணொளியை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் ரீட்வீட் செய்ததால் அனைவருக்கும் இந்தக் காணொளி சென்று சேர்ந்தது.

இதை முன்வைத்து அஸ்வினிடம் கேள்வி எழுப்பியிருந்தார் தமிழக வீரரான அபினவ் முகுந்த். இதற்கு அஸ்வின் வேடிக்கையாகப் பதில் அளித்ததாவது:

அளவுகளின் படி என்னுடையதா எனப் பார்த்தேன். இல்லை. அதில் இனிசியல் இருந்ததா எனப் பார்த்தேன். இல்லை. கடைசியாக நான் பயன்படுத்தும் வாசனைத் திரவியம் குறித்தும் சோதித்துப் பார்த்தேன். சரி. அடேய் கேமராமேன்... எனப் பதிலளித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஆரஞ்சு நிலவு... ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT