செய்திகள்

நாக்அவுட் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்தால் இதுதான் முடிவா?

2014 முதல் நிலைமை மாறிவிட்டது.

ச. ந. கண்ணன்

ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் நாக்அவுட் ஆட்டங்களில் (அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்) இலக்கை விரட்டும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்த அரையிறுதியில் மட்டுமல்ல, 2014 முதல் ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டி நாக்அவுட் ஆட்டங்களில் இலக்கை விரட்டும் அணிகளே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. 

2014 அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்து மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை அணி. அதே போட்டியில் மற்றொரு அரையிறுதியில் இந்தியாவும் இறுதிச்சுற்றில் இலங்கையும் 2-வதாக பேட்டிங் செய்து வெற்றிகளை அடைந்தன. அதன்பிறகு 2016, 2021, 2022 எனத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளின் நாக்அவுட் ஆட்டங்களில் இலக்கை விரட்டும் அணிகளே வெற்றிகளை அடைந்துள்ளன. 

இத்தனைக்கும் 2014 வரை நிலைமை வேறாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து 2014 வரை டி20 உலகக் கோப்பை நாக் அவுட் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக வெற்றிகளை அடைந்துள்ளன. 2014 முதல் நிலைமை மாறிவிட்டது. அடுத்த டி20 உலகக் கோப்பைப் போட்டி நாக்அவுட் ஆட்டங்களில் டாஸ் வெல்லும் அணிகள் இதை மனதில் எண்ணி முடிவுகள் எடுக்க வேண்டும். அதற்கு முன்பு இதே நிலைமை இந்த வருட டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றிலும் தொடர்கிறதா என்று பார்க்கலாம். 

ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டி:  முதல் 13 நாக்அவுட் ஆட்டங்களில்

முதலில் பேட்டிங் செய்த அணிகள் பெற்ற வெற்றிகள்: 8
2-வதாக பேட்டிங் செய்த அணிகள் பெற்ற வெற்றிகள்: 5

ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டி:  கடைசி 10  நாக்அவுட் ஆட்டங்களில்

முதலில் பேட்டிங் செய்த அணிகள் பெற்ற வெற்றிகள்: 0
2-வதாக பேட்டிங் செய்த அணிகள் பெற்ற வெற்றிகள் : 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்க தயார்: கூப்பர் கன்னோலி

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.70ஆக நிறைவு!

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5,000 வழங்க வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT