செய்திகள்

நியூசிலாந்து தொடர்: மீண்டும் பயிற்சியாளராகும் விவிஎஸ் லக்‌ஷ்மண்!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் நியூசிலாந்து தொடரில்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. 

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் நியூசிலாந்து தொடரில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விவிஎஸ் லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் செயல்படவுள்ளார்.  இதற்கு முன்பு அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களிலும் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ராகுல் டிராவிடுக்குப் பதிலாக லக்‌ஷ்மண் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 

இந்திய அணி டிசம்பரில் வங்கதேசத்துக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். மேலும் நியூசிலாந்தில் பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கரும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சைராஜ் பெளதுலேவும் பணியாற்றவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்க தயார்: கூப்பர் கன்னோலி

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.70ஆக நிறைவு!

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5,000 வழங்க வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT