தென்னாப்பிரிக்க அணி 
செய்திகள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: பிரபல தெ.ஆ. வீரர் விலகல்!

29 வயது பீட்டர்சன், தென்னாப்பிரிக்க அணிக்காக இதுவரை 10 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்திலிருந்து பிரபல வீரர் கீகன் பீட்டர்சன் விலகியுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ல் தொடங்குகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாகப் பிரபல தென்னாப்பிரிக்க பேட்டர் கீகன் பீட்டர்சன் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியுள்ளார். டி20 போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 2021-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பீட்டர்சன், இதற்கு முன்பு கரோனா பாதிப்பு காரணமாக நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து விலகினார். 

29 வயது பீட்டர்சன், தென்னாப்பிரிக்க அணிக்காக இதுவரை 10 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT