செய்திகள்

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: நடுவர்களை அறிவித்தது ஐசிசி

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.

IANS

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை இன்று அறிவித்தது ஐசிசி. மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனா ஆகிய இருவரும் கள நடுவர்களாகப் பணியாற்றவுள்ளார்கள். 3-வது நடுவராக கிறிஸ் கஃபானியும் 4-வது நடுவராக பால் ரீஃபிலும் பணியாற்றவுள்ளார்கள். ரஞ்சன் மடுகலே போட்டி நடுவராக இருப்பார். 

இதற்கு முன்பு , இங்கிலாந்து அணி 2010 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் வென்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT