செய்திகள்

மெல்போர்னில் புதிய சாதனை படைக்குமா இங்கிலாந்து?

இதுவரை எந்தவொரு அணியும் நடப்பு ஒருநாள், டி20 உலகக் கோப்பை சாம்பியனாக இருந்தது கிடையாது.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

2019 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி. தற்போது டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான முயற்சியிலும் உள்ளது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக சாம்பியனாகி விட்டால் அது புதிய சாதனையாக இருக்கும்.

இதுவரை எந்தவொரு அணியும் நடப்பு ஒருநாள், டி20 உலகக் கோப்பை சாம்பியனாக இருந்தது கிடையாது.

2007 ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. அதன்பிறகு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையை (2007) வென்றது இந்தியா. 

2011 ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்றது. அதன்பிறகு நடைபெற்ற 2012 டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. 

2015 ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. அதன்பிறகு நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. 

2019 ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. 

2015 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டு புதிய அணியாக மாறியது இங்கிலாந்து. அதிரடி ஆட்டத்தால் 2019 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையை வென்றால் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக இருக்கும் முதல் அணி என்கிற பெருமையை இங்கிலாந்து அடையும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இங்கிலாந்து நிறைவேற்றுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT