முகப்பு
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: போர்ச்சுகல் அணி வெற்றி! 

லீக் சுற்றில் குரூப் ஹெச் பிரிவில் போர்ச்சுகல் அணி கானாவை வீழ்த்தியது. 

Updated On : 24 நவம்பர் 2022, 11:36 pm IST
பகிர்:

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. 

லீக் சுற்றில் குரூப் ஹெச் பிரிவில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதியது. முதல் பாதி வரை எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. முதல் கோலை போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65வது நிமிடத்தில் அடித்தார். 

Advertisement

Advertisement

73வது நிமிடத்தில் கானாவும் ஒரு கோல் அடித்து அசத்தியது. விருவிருப்பாக சென்ற போட்டியில் போர்ச்சுகல் 3கோல் அடித்திருந்த நிலையில் 89வது நிமிடத்தில் கானா தனது 2வது கோலை அடித்தது. 

கானா அணி போராடி தோற்றது. இறுதியில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.