செய்திகள்

உலகக் கோப்பை: கேமரூனை வீழ்த்திய ஸ்விட்சர்லாந்து

DIN

கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்து அணி, தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள கேமரூனை 1-0 என வீழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்கு மூன்று முறை (1934, 1938, 1954) தகுதி பெற்றும் அரையிறுதிக்கு முன்னேறியதில்லை ஸ்விட்சர்லாந்து அணி. தற்போது தொடர்ச்சியாக 5-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுகிறது. 1990-ல் காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது கேமரூன் அணி. உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கேமரூன் தான். அதேபோல 8 முறை உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியும் கேமரூன் தான். 

யூரோ 2020 போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஸ்விட்சர்லாந்து கேமரூனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நன்றாக விளையாடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 2-வது பாதி தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ அபாரமான கோலை அடித்தார். இறுதியில் 1-0 என கேமரூனை வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT