செய்திகள்

ஷ்ரேயர் ஐயர், தவன் அபார பேட்டிங்: நியூசி.க்கு 307 ரன்கள் இலக்கு

வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். 

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.

ஆக்லாந்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். 

தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவனும் ஷிப்மன் கில்லும் இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். 10 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்த இந்திய அணி, 20 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. தவன் 63 பந்துகளிலும் ஷுப்மன் கில் 64 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். 65 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஃபெர்குசன் வீசிய 33-வது ஓவரில் ரிஷப் பந்த் 15 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். அப்போது 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. இதன்பிறகு ஷ்ரேயர் ஐயரும் சஞ்சு சாம்சனும் நல்ல கூட்டணி அமைந்தார்கள். சஞ்சு சாம்சன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், இந்திய அணி 300 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக அமைந்தார். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயர் ஐயர் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களுக்குக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT