செய்திகள்

பாகிஸ்தானில் 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து!

19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில்...

DIN

19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இந்த வருட டிசம்பர் இறுதியிலும் ஜனவரி தொடக்கத்திலும் பாகிஸ்தானில் இரு டெஸ்டுகளிலும் அதே ஜனவரியில் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது நியூசிலாந்து அணி. பிறகு ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 2021-ல் பாகிஸ்தானில் வெள்ளைப் பந்து தொடரை ரத்து செய்த காரணத்தால் அதை ஈடு கட்டும் விதமாக ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது. 

கடைசியாக 2003 நவம்பரில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தது நியூசிலாந்து. 

நியூசிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

கராச்சியில் இரு டெஸ்டுகள்

முதல் டெஸ்ட், டிசம்பர் 27-31
2-வது டெஸ்ட், ஜனவரி 4-8

ஒருநாள் தொடர்

கராச்சியில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள்

2023 ஜனவரி 11, 13, 15.

டி20 தொடர்

கராச்சியில் 4 டி20 ஆட்டங்கள். ஏப்ரல் 13, 15, 16, 19.

லாகூரில் 5-வது டி20 ஆட்டம். ஏப்ரல் 23.

ஒருநாள் தொடர்

லாகூரில் முதல் இரு ஆட்டங்கள். ஏப்ரல் 26, 28. 

ராவல்பிண்டியில் கடைசி மூன்று ஆட்டங்கள். மே 1, 4, 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT