செய்திகள்

மரியாதை என்பது வெற்றி, தோல்வியை வைத்து வருவதல்ல: அஸ்வின் பதிலடி!

எதிரணிக்குத் தரப்படும் மரியாதை, வெற்றி - தோல்வியை வைத்து வருவதல்ல என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்...

DIN

எதிரணிக்குத் தரப்படும் மரியாதை, வெற்றி - தோல்வியை வைத்து வருவதல்ல என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. இதன்பிறகு பாகிஸ்தானை இந்திய அணி மரியாதையுடன் அணுகுவதாகப் பேட்டியளித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

ரமீஸ் ராஜா அவ்வாறு சொன்னாரா என எனக்குத் தெரியாது. இது ஒரு கிரிக்கெட் ஆட்டம். நாங்கள் அடிக்கடி பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை. இரு அணிகளுக்கும் இடையில் போட்டி மனப்பான்மை பெரிதாக உள்ளது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்பது இரு நாட்டு ரசிகர்களுக்கும் முக்கியமானதாகும். கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் ஓர் அங்கம் என்பதை ஒரு கிரிக்கெட் வீரர் புரிந்துகொள்வார். டி20 கிரிக்கெட்டில் வெற்றி வித்தியாசம் நூலிழையில் தான் இருக்கும். எதிரணி மீதான மரியாதை என்பது அவர்களுக்கு எதிரான வெற்றி, தோல்வியை வைத்து வருவதல்ல. நீங்கள் எப்படி ஓர் அணியாக உருவாகியிருக்கிறீர்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படும். நாங்கள் நிச்சயமாக பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம். அவர்களும் எங்களை மரியாதையாக நடத்துகிறார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT