செய்திகள்

ஏதாவது செய்து சுவாரசியமாக்குங்கள்: பிரபல ஆஸி. வீரர் கோரிக்கை

50 ஓவர்களாக விளையாடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாகக் குறைக்க வேண்டும் என...

DIN


50 ஓவர்களாக விளையாடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாகக் குறைக்க வேண்டும் என பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகி வருகிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் நடு ஓவர்கள் சுவாரசியமில்லாமல் இருப்பதாகப் பலரும் அபிப்ராயப்படுகிறார்கள். இதுதொடர்பாக பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவில் வீசப்படும் 10 ஓவர்களை நீக்க வேண்டும். அல்லது ஏதாவது செய்து சுவாரசியமாக்க வேண்டும். 20 முதல் 30 ஓவர்கள் வரை ஏதாவது போனஸ் அல்லது கூடுதல் ஃப்ரீ ஹிட்கள் கொடுக்க வேண்டும். கொஞ்சம் சுவாரசியமாக்க வேண்டும் என்றார்.

ஆனால் ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

எப்போதும் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு இந்த விவாதம் ஏற்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT