செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பும்ராவுக்குப் பதிலாக ஷமி தேர்வு!

காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பிரிஸ்பேனில் மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, விரைவில் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார். மேலும் மாற்று வீரர்களாக சிராஜும் ஷர்துல் தாக்குரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் விரைவில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார்கள். மாற்று வீரர்களாக இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயரும் ரவி பிஸ்னோயும் இதுவரை ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. மற்றொரு வீரரான தீபக் சஹார், காயம் காரணமாக விலகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT