செய்திகள்

சையத் முஷ்டாக் அலி: தமிழக அணிக்கு 2-வது வெற்றி

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

DIN

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

முதல் ஆட்டத்தில் சத்தீஸ்கரிடம் தோற்ற தமிழக அணி, 2-வது ஆட்டத்தில் ஒடிஷாவை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் சிக்கிம் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சிக்கிம் அணி, 20 ஓவர்களில் 79 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் பங்கஜ் குமார் ராவத் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தமிழக அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நாராயண் கெகதீசன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார். 

ஞாயிறன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் அணியை எதிர்கொள்கிறது தமிழக அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT