செய்திகள்

நெருக்கடி தந்த ஜிம்பாப்வே: தடுமாற்றத்துடன் 153 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகள் அணி!

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த திங்களன்று ஸ்காட்லாந்துக்கு எதிராகத் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்ற ஜிம்பாப்வே அணி, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக ஜிம்பாப்வே கேப்டன் கிரைக் எர்வின் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ரெஜிஸ் சகாப்வா கேப்டனாகச் செயல்படுகிறார். 

9-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என நல்ல நிலைமையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அதன்பிறகு தான் ஆட்டம் வேறு பாதையில் சென்றது. 13, 14-வது ஓவர்களில் ஒரேடியாக 4 விக்கெட்டுகளை இழந்தது. நன்கு விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் 45 ரன்களில் ரன் அவுட் ஆனதால் நிலைமை இன்னும் மோசமானது. கேப்டன் நிகோலஸ் பூரன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராஸா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடைசி இரு ஓவர்களில் 26 ரன்கள் எடுத்ததால் ஓரளவு கெளரவமான ஸ்கோரைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் 28 ரன்களும் அகேல் ஹுசைன் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்து உதவினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT