பந்துவீச்சில் மிரட்டிய சாம் கரண்: 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் குவித்துள்ளது.
செய்திகள்பந்துவீச்சில் மிரட்டிய சாம் கரண்: 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையும் படிக்க: காளான் பறிக்கச் சென்ற இரு பெண்கள் வெட்டிக் கொலை!
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரதுல்லா ஷசாய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். இந்த இணை பெரிதாக ரன் சேர்க்கவில்லை. ஷசாய் 7 ரன்களிலும், ரஹமனுல்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, இப்ரஹீம் ஷத்ரன் மற்றும் உஸ்மான் கானி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இப்ரஹீம் 32 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நஜிபுல்லா 13 ரன்களிலும், கேப்டன் முகமது நபி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்வரிசையில் களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் ஏதும் குவிக்கவில்லை. அஸ்மதுல்லா 8 ரன்களிலும், ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் ராகுல்
இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.