முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை, சூப்பர் 12 சுற்றில் முதல் வெற்றியை பதிவு  செய்தது  பாகிஸ்தான் அணி.

Updated On : 30 அக்டோபர் 2022, 4:03 pm IST
பந்தை பவுண்டரிக்கு விளாசும் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்
பகிர்:

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால் இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது.  

நெதர்லாந்து அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆக்கர்மேன் 27 ரன்களும், எட்வர்ட் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகள், வாசிம் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். ஃபக்கர் ஜமான் 20 ரன்களும், ஷான் மசூத் 12 ரன்களும் எடுத்தனர். 

Advertisement

Advertisement

சூப்பர் 12 சுற்றில் முதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி. அரையிருதிக்கு தகுதி பெற மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். நெதர்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது குறிப்பிட்டத்தக்கது.

ஷதாப் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.