செய்திகள்

நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமனம்! 

நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். 

டி20 உலக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவானும், டி20 போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித், விராட், கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: 
ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஷ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர், ஷபாஷ் அஹமது, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென், உம்ரான் மாலிக். 

நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: 
ஹார்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஷ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், மொஹமது சிராஜ், புவனேஷ்வர்குமார், உம்ரான் மாலிக். 

இது முடிந்ததும் வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT