செய்திகள்

இந்தியா தோல்வி: அரையிறுதிக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா?

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோற்றதால் அரையிறுதிக்கு நுழைவதற்கான வழிகள் கடினமாகியுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தியாவை வீழ்த்தி 5 புள்ளிகளுடன் குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். 

முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோற்றது. அடுத்ததாக வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதவுள்ளது. 4 புள்ளிகள் கொண்டுள்ள இந்தியா அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி உறுதியாகி விடும். 

ஆனால் வங்கதேசத்தை வீழ்த்தி, கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுடன் இந்தியா தோற்றால் என்ன ஆகும்? ஜிம்பாப்பே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் 7 புள்ளிகளுடன் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ள வாய்ப்புண்டு.

ஜிம்பாப்வேவை இந்திய அணி வீழ்த்தி வங்கதேசத்துடன் தோற்றால் என்ன ஆகும்? வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்தியாவை விடவும் அதிகப் புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புண்டு. 

எதற்கு வம்பு? இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று விட்டால் எந்த அணியையும் இந்தியா நம்பியிருக்க வேண்டியதில்லை.

இன்னொரு சிக்கலும் உண்டு. புதன் அன்று அடிலெய்டில் வங்கதேசத்துக்கு எதிராக மோதுகிறது இந்தியா. அந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட 70% வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வானிலையும் இந்தியாவுக்குத் தடைக்கல்லாக அமையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT