ஆசியக் கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு
ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது.
செய்திகள்ஆசியக் கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு
ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (செப்டம்பர் 1) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெஹிடி ஹாசன் மற்றும் சபீர் ரஹ்மான் களமிறங்கினர். சபீர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து மெஹிடி ஹாசன் மற்றும் கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்க ஆரம்பித்தது. இருப்பினும், இந்த ஜோடியை இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா பிரித்தார். அவரது பந்து வீச்சில் மெஹிடி ஹாசன் போல்டாகி வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய முஸ்ஃபிக்குர் ரஹீம் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஷகீப் 24 ரன்களில் விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹொசைன் மற்றும் மஹ்மதுல்லா ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஹொசைன் 39 ரன்களிலும், மஹ்மதுல்லா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் மொசாதேக் ஹொசைன் அதிரடி காட்ட வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. மொசாதேக் ஹொசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மஹீஷ் தீக்ஷனா, தில்சான் மற்றும் அஷிதா ஃபெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.