செய்திகள்

ஆசியக் கோப்பை: ஜடேஜா விலகல்!

ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார்.

DIN

ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளைத் தோற்கடித்த இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராகத் தேர்வான அக்‌ஷர் படேல், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாவின் காயத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணியுடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT