செய்திகள்

முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்ட தீபக் ஹூடா!

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் தீபக் ஹூடா.

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் தீபக் ஹூடா.

27 வயது தீபக் ஹூடா, பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு வரை இந்தியாவுக்காக 8 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியிருந்தார். கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் கண்ட வீரராக இருந்தார் ஹூடா. ரொமானியாவின் சாத்விக், அதிகபட்சமாக 15 ஆட்டங்களில் இடம்பெற்று தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்டிருந்தார். அந்தச் சாதனையை ஜிம்பாப்வே தொடரில் முறியடித்தார் ஹூடா. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றபோது அது ஹூடாவின் தொடர்ச்சியான 16-வது வெற்றியாக இருந்தது. 

ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பு முதலில் விளையாடிய 17 சர்வதேச ஆட்டங்களில் வெற்றியை மட்டுமே கண்டிருந்தார் ஹூடா. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய ஹூடா 16 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் ஹூடா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT