செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற்ற பிரபல வீரர்

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவுக்குப் பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவுக்குப் பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார்.

2019 உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் பிரபல வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றார். ஆனால், போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு 21 நாள்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 11 டெஸ்டுகள், 70 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஹேல்ஸ். அந்தத் தடைக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வீரர் பேர்ஸ்டோ, காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மீண்டும் இடம்பெற்றுள்ளார். 2019 முதல் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தன்னுடைய திறமையை அவர் நிரூபித்து வந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 6 முதல் தவெக விருப்ப மனு விநியோகம்!

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 9

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 8

ஜிவி பிரகாஷின் லக்கி ஓடிடி வெளியீட்டுத் தேதி!

இந்திய ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! வேளாண் அமைச்சரின் பதிவால் சர்ச்சை!

SCROLL FOR NEXT