முகப்பு
படம்: டிவிட்டர்/ ஐசிசி
செய்திகள்

நிஷாங்கா அரைசதம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

செய்திகள்

நிஷாங்கா அரைசதம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
படம்: டிவிட்டர்/ ஐசிசி
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  

இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் பிரமோத் மதுசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பதும் நிஷாங்கா 55 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →