செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்: உமேஷ் யாதவ் விலகல்!

கவுன்டி கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து காயம் காரணமாகப் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார். 

DIN


கவுன்டி கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து காயம் காரணமாகப் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார். 

34 வயது உமேஷ் யாதவுக்கு மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் பருவத்துக்கான கவுன்டி ஆட்டங்களில் இருந்து உமேஷ் யாதவ் விலகியுள்ளார். காயம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய உமேஷ் யாதவ், பிசிசிஐயின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

இந்தியாவுக்காக 52 டெஸ்டுகள், 75 ஒருநாள், 7 டி20 ஆட்டங்களில் உமேஷ் யாதவ் விளையாடியுள்ளார். கடைசியாகக் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டில் பங்கேற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

SCROLL FOR NEXT