செய்திகள்

கே.எல். ராகுல், ரிஷப் பந்துடன் போட்டியா?: சஞ்சு சாம்சன் பதில்

கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பந்த் என இருவரில் யாரை வெளியேற்றுவார் என்கிற...

DIN

இந்திய அணி வீரர்களுடன் தான் போட்டியிடவில்லை எனப் பிரபல வீரர் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிரபல வீரரான சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

இந்திய அணியில் யாருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெறுவார்? கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பந்த் என இருவரில் யாரை வெளியேற்றுவார் என்கிற ரீதியிலான பேச்சுகள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ஏற்படுகின்றன. என்னுடைய அணிக்காக ராகுல், பந்த் விளையாடுகிறார்கள் என்பதில்  நான் தெளிவாக உள்ளேன். நான் என் அணி வீரர்களுடன் போட்டியிட்டால் அது என் நாட்டை கீழே இறக்குவதாக ஆகிவிடும். 5 வருடங்கள் கழித்து இந்திய அணியில் நான் இடம்பெற்றது அதிர்ஷ்டவசமானது. அப்போதும் இப்போதும் இந்திய அணி நெ.1 ஆகவே உள்ளது. 15 பேரில் ஒருவராக இந்திய அணியில் விளையாடுவது பெரிய விஷயம் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT