கோப்புப் படம் 
செய்திகள்

ரோஹித் சர்மா டி20இல் படைக்கவிருக்கும் புதிய சாதனை என்ன தெரியுமா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடிக்க உள்ளார். 

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடிக்க உள்ளார். 

உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸி., தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணியுடன் ஆஸி. அணி நாளை முதல் (செப்.20) டி20 தொடர் ஆரம்பமாகிறது. 

தற்போது, நியூசிலாந்து வீரர் மார்டி கப்டில் 172 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 171 சிக்ஸர்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். 

2022ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா 17 ஆட்டங்களில் 423 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 143.38. இந்த வருடத்தில் மட்டும்  21 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. மார்டின் கப்டில்  -172 
  2. ரோஹித் சர்மா - 171 
  3. கிறிஸ் கெயில் - 124 
  4. இயான் மோர்கன்- 120 
  5. ஆரோன் பின்ச் - 117 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT