செய்திகள்

டி20 தொடர்: 3-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ள ஸ்டீவ் ஸ்மித்

மிட்செல் மார்ஷ் அணியில் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் 3-ம் நிலை வீரராகக் களமிறங்குவார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார் பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் மொஹலியில் நாளை நடைபெறுகிறது. ஆசியக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராகத் தலா 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது. 

இந்தியாவுக்கு எதிரான தொடரில் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகிய ஆஸி. அணியின் முக்கிய பேட்டர்கள் இடம்பெறவில்லை. இதனால் 3-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். கடைசி 12 ஆட்டங்களில் 8 முறை பேட்டிங் செய்த ஸ்மித், 107.20 ஸ்டிரைக் ரேட்டில் தான் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் ஆஸி. அணியின் பேட்டிங் பற்றி கேப்டன் ஃபிஞ்ச் கூறியதாவது:

மிட்செல் மார்ஷ் அணியில் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் 3-ம் நிலை வீரராகக் களமிறங்குவார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்மித். எனவே அவருடைய திறமையை நாங்கள் அறிவோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT