டேரில் மிட்செல் 
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு, பிரபல ஆல்ரவுண்டருக்கு இடமில்லை!

ஆடம் மில்ன், ஃபின் ஆலன், பிரேஸ்வெல் போன்றோர் நியூசி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்ன், ஃபின் ஆலன், பிரேஸ்வெல் போன்றோர் நியூசி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். காயம் காரணமாகப் பிரபல வீரர் கைல் ஜேமிசன் இந்த அணியில் இடம்பெறவில்லை. மார்டின் கப்தில், 7 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையை இந்தப் போட்டியில் பெறவுள்ளார். டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான அணி, முத்தரப்பு டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது. 

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கிளென் பிளிப்ஸ், மார்க் சேப்மன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், டிம் செளதி, லாகி ஃபர்குசன், ஆலம் மில்ன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT