செய்திகள்

சச்சினின் 100 சதங்களை கோலி தாண்டுவாரா?: பாண்டிங் பதில்

மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால்...

DIN

சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் மொத்தமாக 100 சதங்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எந்த வீரராலும் தொட முடியாது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலியும் ஓய்வு பெற்ற ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தலா 71 சதங்களை எடுத்துள்ளார். 

இந்நிலையில் விராட் கோலி  100 சதங்களை எடுப்பாரா என்கிற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால் ஆமாம் எனப் பதில் சொல்லியிருப்பேன். கோலி இன்னும் பல வருடங்கள் விளையாடப் போகிறார். இன்னும் 30 சதங்கள் எடுக்க வேண்டும் என்பது கடினமான இலக்கு. அதேசமயம் விராட் கோலியால் எதுவும் முடியாது என நான் சொல்ல மாட்டேன். நன்கு விளையாட ஆரம்பித்து விட்டால், அவர் எந்தளவுக்குப் பசியுடன் இருக்கிறார், சாதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

SCROLL FOR NEXT