முகப்பு
செய்திகள்

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்ற இலங்கை வீரர்

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
இலங்கை அணி (கோப்புப் படம்)
பகிர்:

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் பனுகா விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.

இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்தார். பனுகா இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபல வீரர் மலிங்கா கூறினார். 

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் பனுகா.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபட்ச மற்றும் தேர்வுக்குழுவினரைச் சந்தித்த பிறகு தனது ஓய்வு அறிவிப்பை பனுகா திரும்பப் பெற்றுக்கொண்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.