செய்திகள்

ஹர்ஷா போக்ளேவின் கேள்வியால் கடுப்பான ரிஷப் பந்த்!

DIN

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சரியாக விளையாடாதது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த். 

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20யை இந்தியா வென்றது. 3-வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

3-வது ஒருநாள் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கும் முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்தைப் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்ளே பேட்டியெடுத்தார். அப்போது ரிஷப் பந்திடம் அவர் கேட்ட கேள்வி, சேவாக்கிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளேன். இப்போது உங்களைக் கேட்கிறேன். உங்களைப் பார்க்கும்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட் தான் உங்களுக்குப் பிடித்தமானது எனத் தோன்றுகிறது. ஆனால் உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் சாதனை அதனை விடவும் மேலானதாக உள்ளது என்றார். 

ரிஷப் பந்த்: சார், சாதனைகள் எல்லாம் எண்கள் தான். என்னுடைய வெள்ளைப் பந்துச் சாதனைகளும் மோசமல்ல.

போக்ளே (குறுக்கிட்டு): நான் மோசம் எனச் சொல்லவில்லை. அதனை டெஸ்ட் எண்களுடன் ஒப்பிடுகிறேன். 

ரிஷப் பந்த்: ஒப்பிடுவதை என் வாழ்க்கையில் செய்வதில்லை. எனக்கு 24, 25 வயது தான் ஆகிறது. ஒப்பிட வேண்டும் என்றால் எனக்கு 30, 32 வயதாகும்போது செய்யலாம் என்றார்.

ரிஷப் பந்தின் இந்தப் பதிலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஹர்ஷா போக்ளே சரியான கேள்வியைக் கேட்டபிறகும் இதுபோல பதில் சொல்வதா, டி20 கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து தொடர்களிலும் மோசமாக விளையாடியுள்ள ரிஷப் பந்த், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் பதிலளித்துள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் போக்ளேவின் கேள்வியால் கடுப்பானதால் தான் இதுபோன்ற ஒரு பதிலை அவர் கூறியுள்ளார் என்றும் தற்போது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் ரிஷப் பந்த். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT