குஜராத் டாஸ் வென்று பேட்டிங்: அணியில் ஆப்கன் வீரர் சேர்ப்பு!
லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
லக்னௌ அணியில் அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த யுதிர் விலகியுள்ளார்.
குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப்பிற்குப் பதிலாக முதன் முறையாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயதான நூர் அஹமது சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
லக்னௌ அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலும் குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.