படம்: ட்விட்டர் | பிசிபி 
செய்திகள்

உலகக் கோப்பை போட்டிக்கான புதிய சீருடையை அறிவித்த பாகிஸ்தான்! 

ஒருநாள் உலகக் கோப்பைக்காக புதிய சீருடையை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அணி. 

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அஸ்ரப் லாகூரில் கடாபி ஸ்டேடியத்தில் ஸ்டார் நேஷன் ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது. 

ஸ்டார் நேஷன் ஜெர்ஸி என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் ரசிகர்களுக்கும் தொடர்பினை ஏற்படுத்துவதாக இது அமையுமென பிசிபி தெரிவித்துள்ளது. மேலும் வளமையான கிரிக்கெட் வரலாற்றுக்கும் வருங்காலத்துக்கமான இணைப்பாக இந்த புதிய சீருடைகள் இருக்குமென தெரிவித்துள்ளார் அஸ்ரப். 

பிசிபியின் வருவாய் இயக்குநர் உஸ்மான் வாஹீத், “இந்த ஸ்டார் நேஷன் ஜெர்ஸி வெருமனே சீருடை கிடையாது. இது வெற்றி, தியாகம், கதைகளையும் உள்ளடக்கியது. இதி இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் பாகிஸ்தான் ரசிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் குறிக்கும். ஒவ்வொரு பாகிஸ்தானியரும் பெருமைப்படும் விதமாக இந்த புதிய சீருடை தயாரிகப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என அசத்தல் வெற்றி பெற்றதால் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஆசியக் கோப்பை நாளை (ஆக.30) துவங்க உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

SCROLL FOR NEXT