செய்திகள்

வைரஸ் காய்ச்சலால் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார்.

DIN

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் (ஆகஸ்ட் 30) தொடங்கியது. ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடரிலிந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பை தொடருக்காக இலங்கை செல்லும் வங்கதேச அணியுடன் செல்லவில்லை. அவர் காய்ச்சலில் இருந்து குணமடையாததால்  ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டன் தாஸுக்கு பதிலாக வங்கதேச அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அனமுல் ஹாக் பிஜோய் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

முட்டை விலை மாற்றமில்லை

நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாளை சேலம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற முகாம்கள்

SCROLL FOR NEXT