படம்: எக்ஸ்/ஐபிஎல் 
செய்திகள்

ஐபிஎல் ஏலம்: இன்றைய கடைசி வீரர் இவர்தான்!

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் இன்றைய கடைசி வீரராக ஏலம் எடுக்கப்பட்டவர் இவர்தான்.

DIN

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் இன்றைய கடைசி வீரராக ஏலம் எடுக்கப்பட்டவர் சௌரவ் சௌகான் ஆவார்.

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் இன்று (டிச.19) விறுவிறுப்பாக நடைபெற்றது. 

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றன.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில் 214 பேர் இந்திய வீரர்கள், 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இதில் இன்றைக்கு கடைசியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சௌரவ் சௌகான் ஆவார். இவர் ரூ.20 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

குர்ஜப்னீத், கே.எல்.ஸ்ரீஜித் மற்றும் ஜி.அஜிதேஷ் போன்ற சிலர் இன்னும் ஏலம் எடுக்கப்படாமலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT