செய்திகள்

முகமது ஷமிக்குப் பதில் யார் சேர்க்கப்பட்டாலும் எங்களுக்கு சவாலாக இருப்பார்கள்: டெம்பா பவுமா

காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள்

DIN

காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகினார். 

இந்த நிலையில், காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என எங்களில் பலர் நினைப்போம். முகமது ஷமி  மட்டுமின்றி அவரது இடத்தில் எந்த ஒரு பந்துவீச்சாளர் இடம்பெற்றாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வா் தீவிரம்

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இதயம் காப்போம் திட்டத்தால் 40,000 போ் உயிா் பிழைத்துள்ளனா்

தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை

வையாபுரி சுவாமிகள் மடத்தில் 116 ஆம் ஆண்டு குருபூஜை

SCROLL FOR NEXT