பயிற்சியாளர் டிராவிட் (கோப்புப் படம்) 
செய்திகள்

டெஸ்ட் தொடர்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.

முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அஸ்வினைப் போல பந்துவீச்சு முறையைக் கொண்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மஹீஸை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்கள். 

இந்நிலையில் இந்திய வீரர்கள் நாகபுரியில் இன்று வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதற்கான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT