செய்திகள்

பிரபல பாகிஸ்தான் வீரரின் மகளை மணந்த ஷாஹீன் அப்ரிடி! 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

DIN

2021-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக  தேர்வு செய்யப்பட்டவர் ஷாஹீன் ஷா அப்ரிடி. சா்கேரிபீல்ட் சோபா்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதைப் பெறும் பாகிஸ்தான் வீரா் என்ற சிறப்பை ஷாஷீன் அப்ரிடி பெற்றவரும் இவரே. 

3 வகையான அனைத்து சா்வதேச ஆட்டங்களில் 219 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்தும் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் ஷாஹீன் அஃப்ரிடி விலகினார். நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றார். ஷாஷீன் சிறப்பாக பந்து வீசினாலும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வென்றது. 

ஐசிசி தரவரிசையில் டெஸ்ட்டில் 6வது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 8வது இடத்திலும், டி20யில் 15வது இடத்திலும் உள்ளார். 

பாகிஸ்தானின் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடியின் மகளான அன்ஷாவை திருமணம் செய்துள்ளார். இதில் பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி கூறியதாவது:

மகள் என்பவர் நமது தோட்டத்தின் மிகச்சிறந்த பூ. ஏனெனில் அவர்கள் சிறந்த ஆசிவாதத்துடன் பூக்கிறார்கள். ஒரு மகள் என்பது நீங்கள் சிரிக்கவும் கனவு காணவும் உங்கள் முழு மனதுடன் நேசிக்கும் ஒருவர். பெற்றோராக நாங்கள் எங்களது மகளை ஷாஹீன் அப்ரிடிக்கு திருமணம் செய்துள்ளோம். இருவருக்கும் வாழ்த்துகள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT