செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பிரபல இந்திய வீராங்கனை விலகல்!

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ளார்.

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன. ஞாயிறன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் அரையிறுதி தொடங்குவதற்கு சில நேரங்களுக்கு முன்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது இந்திய மகளிர் அணி. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் பூஜா வஸ்தரகர் உலகக் கோப்பைப் போட்டியின் மீதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். திங்கள் அன்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பூஜா ஆகிய இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இரு நாள்களாகக் காய்ச்சலில் ஹர்மன்ப்ரீத் கெளர் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதனால் ஹர்மன்ப்ரீத் கெளருக்குப் பதிலாக ஹர்லீன் தியோல் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பூஜா விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஸ்னேக் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரையில் பலத்தக் காற்று

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

SCROLL FOR NEXT