செய்திகள்

சதமடித்த பாபா இந்திரஜித், பிரதோஷ்: 3-வது நாளில் தமிழ்நாடு அபாரமான பேட்டிங்!

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தமிழக வீரர்களான பாபா இந்திரஜித், பிரதோஷ் ஆகிய இருவரும் சதமடித்துள்ளார்கள்.

DIN

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தமிழக வீரர்களான பாபா இந்திரஜித், பிரதோஷ் ஆகிய இருவரும் சதமடித்துள்ளார்கள்.

மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.  தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 162, தனுஷ் 71, மோஹித் 69 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணியின் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்றது மும்பை அணி.

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது தமிழக அணி. முன்னணி பேட்டரான பாபா இந்திரஜித்தும் பிரதோஷும் அபாரமாக விளையாடி சதமடித்தார்கள். இந்திரஜித் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-வது நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்துள்ளது. பிரதோஷ் 107, விஜய் சங்கர் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

4-வது நாளில் தமிழக அணி திடீரென ஆதிக்கம் செலுத்தி மும்பையைத் தோற்கடிக்க வாய்ப்புள்ளதா என்கிற ஆவல் தமிழக ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT