செய்திகள்

3வது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்க வேண்டும்: இங்கிலாந்திற்கு பாண்டிங் அறிவுரை! 

பிரபல வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை 3வது ஆஷஸ் போட்டியில் களமிறக்கக் கூடாது என ஆஸி. முன்னாள் கேப்டன் பாண்டிங் அறிவுரை கூறியுள்ளார். 

DIN

இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிதான் ஆஷஸ். இதுவரை ஆஸ்திரேலியா அணி 34 தொடரினை வென்று முன்னிலையில் உள்ளது. 32 தொடரினை வென்ற இங்கிலாந்து சமீபகாலமாக ஆஸ்திரேலியாவுடன் தொடர் தோல்விகளை தழுவி வருகின்றன. 

தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 40 வயதாகும் இங்கிலாந்தின் நட்சத்திர பௌலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரியாக பந்து வீசவில்லை. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் மைதானத்தை குறைக்கூறி வருகிறார். ஆனால், டெஸ்டில் 688 விக்கெட்டுகளை எடுத்து உள்ளதும் குறிபிடத்தக்கது. 

2 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து 75.33 சராசரி ரன்களை வழங்கியுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட் கேட்சினை 2வது டெஸ்ட் நான்காம் நாளில் தவறவிட்டார். 

இது குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது: 

இங்கிலாந்திற்கு இந்தத் தொடரில்  மிகவும் மோசமான பந்து வீச்சாளராக ஆண்டர்சன் மாறியுள்ளார். புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் ஆண்டர்சன், பந்தினை நன்றாக ஸ்விங் செய்வார், ரன்களும் வழங்கமாட்டார். ஆனால் இந்தத் தொடரில் அப்படி பார்க்கமுடியவில்லை. 

ஆண்டர்சனுக்கு பதிலாக மார்க் வுட்டை யோசித்து பார்க்கலாம். மார்க் வுட் உடல் நிலை நன்றாக இருந்தால் நிச்சயமாக அவரை விளையாட வைக்கலாம். இங்கிலாந்திற்கு அடுத்த 3 போட்டிகளை வெல்ல வேண்டிய அவசியம் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் காலமானார்!

கலாமின் கனவு இந்தியாவை உருவாக்குவோம்! மோடி

ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

SCROLL FOR NEXT