முகப்பு
செய்திகள்

90 ஓவர், 174 ரன்கள், 7 விக்கெட்டுகள்: யார் வெற்றி பெறுவார்கள்? 

முதல் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களும், ஆஸி. அணி 386/10 ரன்களும் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 273 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்துள்ளது. 

4வது நாளின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 107/3 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெஸ்டின் சிறந்த் பேட்ஸ்மேன்களான லபுஷேன், ஸ்மித் விக்கெட்டை பிராட் எடுத்து அசத்தினார். தற்போது களத்தில் உஸ்மான் கவாஜா 34 ரன்களுடனும் ஸ்காட் போலாண்ட் 13 ரன்களுடனும் 4வது நாளை முடித்தனர். 

இன்று 90 ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை. அதனால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கும். இந்திய  நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.