செய்திகள்

ஸ்ரேயஸ் இடத்தில் களமிறங்கிய ஸ்ரீகர் பரத்: காரணம் இதுதானா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் முதுகு வலியின் காரணத்தால் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் முதுகு வலியின் காரணத்தால் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தை விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஜடேஜாவுக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இடத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முகுது வலி ஏற்பட்டதால் ஸ்ரீகர் பரத் அவருக்கு முன்னதாக களமிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஸ்ரேயஸ் ஐயர் ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்திருப்பதாவது: மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி இருப்பதாக தெரிவித்தார். அவர் தற்போது ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகு வலியின் காரணத்தினால் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 13 ஊழியா்கள் மீது நடவடிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT