சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து வீரர்!
உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அறிவித்துள்ளார்.
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை.
இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியைடைந்து ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
இதையும் படிக்க: அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்!
இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 33 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார்.
டேவிட் வில்லி இங்கிலாந்து அணிக்காக இதுவரை 70 போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.